கரும்பு காட்டில் குழந்தைகளுக்கு தாலாட்டு: பெண் தொழிலாளர்கள் செயலால் ஆனந்த கண்ணீர்!

சத்தியமங்கலத்தில் தொழில் செய்யும் இடத்தில் குழந்தைகளுக்கு தனி வீடு கட்டும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் செயல் அனைவரது கண்களில் ஆனந்த கண்ணீரை வர வைத்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் குன்றி, மாக்கம்பாளையம், கோவிலுர் ஆகிய கிராமங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ளன. பொங்கல் பண்டிகை தொடங்கியுள்ளதால், கோபிசெட்டிபாளையம் பகுதியில் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், குடும்பத்துடன் வேலை செய்வதால் பெரும்பாலான பெண்கள் கைக்குழந்தையுடன் கரும்பு வெட்டும் பணியை செய்கின்றனர். இதனால், தங்கள் குழந்தைகளை கரும்புக்காட்டு அருகிலேயே அமர வைத்து பெண்கள் தங்கள் கரும்பு வெட்டும் பணியை செய்கின்றனர்.

சில குழந்தைகள் கரும்பு காட்டிலேயே விளையாடி மகிழ்கின்றனர். சில குழந்தைகள் விளையாட்டாக கரும்பு வெட்டுகின்றனர். பல ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் உள்ளதால் குழந்தைகள் வெயிலில் காய்கின்றனர். குழந்தைகள் கரும்பு காட்டிலேயே தூங்கி விழும்போது பெண்கள், அங்கேயே கரும்புகளை முக்கோண வடிவேல் அமைத்து அதில் சேலையை தூரி ஆக்கி அதில் குழந்தையை படுக்க வைத்து தாலாட்டு பாடுகின்றனர். குழந்தை தூங்கிய பின், மீண்டும் கரும்பு வெட்டும் பணிக்கு செல்கின்றனர். அப்போது அருகில் மற்றொரு குழந்தையை பாதுகாப்புக்கு வைத்து கண்காணிக்கின்றனர்.

வறுமை காரணமாக பெண்கள் கரும்பு வெட்டும் தொழில் செய்யும் இடத்திலேயே குழந்தைகளை வளர்க்கின்றனர். குளிரூட்டப்பட்ட அறையில் குழந்தைகளை சொகுசு தொட்டில் கட்டினால் கூட தூங்காத குழந்தைகள் இங்கு குறட்டை விட்டு தூங்கும் போது காண்போர் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிகிறது. பெண்களில் இந்த நிலையை பார்த்து சிலர் கண்கள் களங்கவும் செய்கிறது.

More News >>