ஊரெல்லாம் ஓவியம் வரையும் மாதவன் படக்குழு..
ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மாறாவை பிரமோத் பிலிம்ஸ் பேனரில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரிக்க, திலீப் குமார் இயக்கியுள்ளார். ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய தமிழ் வெளியீடான மாறா, வெளியான சில மணி நேரங்களிலேயே உலகெங்கிலும் உள்ள விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடமிருந்து மிகவும் உற்சாகமூட்டும் விமர்சனங்களைப் பெற்றது. ஓவியங்கள், அழகிய இடங்கள் மற்றும் வசீகரிக்கும் கதைகள் நிறைந்த ஒரு மாயா ஜால உலகிற்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்று, எல்லோரும் விரும்பும் நன்னம்பிக்கை மற்றும் நலனைப் பேணும் திரைப்படமாக மாறா வெளிவந்துள்ளது.
மாறாவின் வித்தையை உயிர்ப்புடன் சென்னை மற்றும் கோயம்புத்தூர் தெருக்களில் பரப்புவது சில்வர் பிரஷ் ஸ்டுடியோ, சென்னையைச் சேர்ந்த கலைஞர்கள், முறையே கிறிஸ் பிளேர் வின்சென்ட் மற்றும் லோட்டஸ் ஹெட் என்பவர்களாகும். தமிழ்நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் சுவர் ஓவியங்கள் மூலம், சென்னையைச் சேர்ந்த இந்த கலைஞர்கள் நகரத்தை அழகுபடுத்தியது மட்டுமல்லாமல், மாறாவின் கதைச் சாரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த திரைப்படம் முழுவதும் மாறா அதாவது ஆர் மாதவனை பற்றியது. அவரது இருப்பு எப்போதும் ஒரு தென்றலைப் போன்று அவரது கிராமத்தையும் உலக மக்களின் வாழ்க்கையும் அழகு படுத்துகிறது.
அவரது நடிப்பு இந்தத் திரைப்படத்திற்குப் பொருத்தமான ஒரு புகழுரை. மாறாவின் கதைச்சாரத்தை வெளிப்படுத்தும் வசப்படுத்தும் சுவர் ஓவியங்கள் மற்றும் விளம்பரத் தட்டிகளை பெசன்ட் நகர், எக்மோர், வளசரவாக்கம், கோயம்பத்தூர், வி.ஆர் மால், பாண்டி பஜார், ஃபோரம் மால் மற்றும் கே.என்.கே சாலை ஆகிய இடங்களில் காணலாம். ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோருடன் அலெக்சாண் டர் பாவ், சிவாதா நாயர், மவுலி, பத்மாவதி ரோ மற்றும் அபிராமி ஆகியோரும் திலீப்குமார் இயக்கியுள்ள மாறாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாறா தற்போது 240 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் அமேசான் பிரைம் வீடியோ ஒளிபரப்புகிறது.