ஆரியை பற்றி அவதூறாக பேசிய குக் வித் கோமாளி தொகுப்பாளர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..
பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஆரி அர்ஜுனன். இவர் சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்க கூடியவர். அதுமட்டும் இல்லாமல் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாகவும் திகழ்ந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாளை கடந்து விட்டது. இதனால் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் வருகை தந்து வருகின்றனர். இவரது நேர்மையால் பல கோடி மக்களை கவர்ந்துள்ளார். மற்றவர்கள் தவறை எடுத்து கூறுதல், டாஸ்க்கை தனது மதியால் வெல்வது, உண்மை, நேர்மை போன்ற முழு உருவமாய் இருக்கக்கூடியவர் தான் ஆரி. பிக் பாஸ் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் வெளியே பல பேருக்கு செல்ல பிள்ளையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எந்த சீசனனிலும் இவர் தான் டைட்டில் வின்னர் என்று ஆணி தனமாக சொல்ல முடியாது. ஆனால் இந்த முறை ஆரி தான் வின்னர் என்று 97% சதவீதம் உறுதியாகியுள்ளது. மக்களை பொறுத்த வரை ஆரி எப்போவா ஜெயித்து விட்டார். இன்னும் கப்பு மட்டும் தான் பாக்கி என்று ஆரியின் ரசிகர்கள் பெருமிதமாக கூறி வருகின்றனர். இந்நிலையில் வாழ்க்கையை சிறிய தொகுப்பாளராக தொடங்கி இன்று நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் ரக்ஷன். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார்.
இவர் சோசியல் மீடியாவில் ஆரியை பற்றி தரக்குறைவாக கூறியுள்ளார். அதாவது ஆரியின் ரசிகர்கள் எல்லாம் போலியானவை. இவற்றையெல்லாம் அவரது பி.ஆர்.ஒ வின் செட்டப் என்று பதிவு செய்திருந்தார். இதனை அறிந்த ஆரியின் ரசிகர்கள் ரக்ஷனை திட்டி தீர்த்து வருகின்றனர். இதை கண்டு பயந்த ரக்ஷன் இந்த செய்தி எனக்கு தெரியாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லி அவர் போட்ட பதிவை நீக்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நான் ஆரி அண்ணா மேல் அதிக மரியாதையை வைத்துள்ளேன். அவர் வெளியே வந்ததும் கண்டிப்பாக அவரை சந்திப்பேன் என்று கூறி பிளேட்டை திருப்பி போட்டுள்ளார்.