`தமிழ்நாட்டுல படம் வரலையே!- மனமுடைந்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்ஜின் அடுத்தப் திரைப்படமான `மெர்குரி’, இன்று தமிழகத்தைத் தவிர உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து கார்த்திக் சுப்பராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஸ்டிரைக் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தியேட்டர்களில் எந்தத் தமிழ் திரைப்படமும் வெளியிடப்படவில்லை.
இதனால், பல முக்கிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது சைலன்ட் த்ரில்லர் படமான `மெர்குரி’-யை தமிழ்நாட்டைத் தவிர 1000-த்துக்கும் மேற்பட்ட மற்ற இடங்களில் ரிலீஸ் செய்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், `இன்று உலகத்தின் பல்வேறு இடங்களில் `மெர்குரி’ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஸ்டிரைக் காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. என்னை அடையாளம் காட்டிய தமிழ் மண்ணில் என் திரைப்படம் வெளியாகவில்லை என்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்வரை தமிழக ரசிகர்கள் காத்திருக்கும்படி வேண்டி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து படத்தைத் திருட்டுத்தனமாகப் பார்த்து விடாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com