முன்னாள் பொறியியல் மாணவர்களுக்கான கடைசி வாய்ப்பு!
தமிழகத்தில் மட்டும் தோராயமாக 450 பொறியில் கல்லூரிகள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டொன்றுக்கு சராசரியாக 1.5 இலட்சம் மாணவர்களுக்கு மேலு பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். அவர்களில் பலரும் பொறியியல் படிப்பிற்கான காலவரையறை முடிந்த நிலையிலும், இன்னும் அவர்களால் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பொறியில் படிப்பானது நான்கு ஆண்டுகாளம் காலவரையறை உடையது. மாணவர்கள் நான்கு வருடங்கள் முடித்து, அவர்களின் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களின் காலவரையறை முடிந்து மூன்றாண்டுகளுக்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாத மாணவர்களால் அவர்களின் பொறியியல் பட்டத்தை பெறவது கடினமான ஒன்றாக மாறிவிடும்.
அப்படிப்பட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கருணை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு பலமுறை வாய்ப்பு வழஙகப்பட்டும், சில மாணவர்களால் தேர்ச்சி பெற இயலவில்லை. இந்நிலையில் 2001-2002 கல்வியாண்டில் மாநில பல்கலைக்கழகத்தில் இருந்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்ட மாணவர்களில் இன்னும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, இம்முறை மீண்டும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு அண்ணா பல்கலைகழகத்தால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2020 ல் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கு தேர்வு நடைபறவில்லை. மேலும், இந்த தேர்வில் காலாவதியான மாணவர்களை பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவராததால், பலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை.
எனவே அந்த மாணவர்களால் தேர்வு எழுதும் வாய்ப்பை பெற முடியவில்லை. இந்நிலையில் கடந்த 09-05-2019 அன்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் இம்மாணவர்களுக்கான கருணை வாய்ப்பை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 202-2003 விருந்து பொறியியல் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இத்தேர்வுக்கான கட்டணம் வரும் ஜனவரி 13 லிருந்து தொடங்கவுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வு கட்டணம் இல்லாமல், ரூ.5000 அபராதமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவிடலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30-01-2021 ஆகும். இதற்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/STUCOR_Spl_Case_Exams_Feb2021.pdf