மணிரத்னத்துக்கு போட்டியாக பொன்னியின் செல்வன் வெப் தொடரில் பிரபல நடிகர் நடிக்கிறார்..
ஒரு சில படங்கள் திரைக்கு வரும்போது இரண்டு கதைகளும் ஒரே சாயலில் இருப்பதாக சந்தேகம் எழுவதுண்டு. அதற்குக் காரணம் ஒரே கதை பலரிடம் இயக்குனர்கள் சொல்வதால் அது லீக் ஆகி மற்றொரு வடிவில் வருகிறது. ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரண்டு பாகமாக இது உருவாகி வருகிறது. பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் தற்போது நடிக்கிறார்.
இப்படத்துக்காக விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப் பிடிப்பு தடைப்பட்டது. கடந்த 9 மாதமாக படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்க மணிரத்னம் திட்டமிட்டார். ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதில் குணம் அடைந்தவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வந்தார்.
இதற்கிடையில் படப் பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து மணிரத்தினம் ஐஸ்வர்யாராயிடம் பேசி வந்தார். ஜனவரியில் படப் பிடிப்பு தொடங்க முடிவானதுஅதன்படி ஐதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப் பிடிப்பு சத்தமில்லாமல் இன்று தொடங்கி உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி சரத்குமார், த்ரிஷா ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் படமாகின்றன. இதில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மற்றொரு கதாபாத்திரத்தில் சரத்குமாருடன் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்.பொன்னியின் செல்வன் படம் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகிறது. நகரத்துப் பின்னணியிலான படங்களையே இதுவரை மணிரத்னம் இயக்கி வந்தார். முதன்முறையாகச் சரித்திர படம் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் சிரஞ்சீவி நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப விவரங்கள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் அஜய் பிரதீப்.ஏற்கனவே மறந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் திரைப்படமாகவும் குடின் என்ற பெயரில் வெப் சீரிஸாகவும் உருவாகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.