இது கேப்டனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ` இயன்றதை செய்வோம், இல்லாவதற்கே என்ற கொள்கையோடு, தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்கள் சாதி, மதத்திற்கு அப்பார்ப்பட்டு, நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு, இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற வேருபாடுடின்றி, அமைதியாக, ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், எல்லா நலனும் பெற்று நாம் அனைவரும் வாழவேண்டும் என்று தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த 'விளம்பி' வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக தீவர அரசியலில் ஈடுபாடு காண்பிக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ட்விட்டரில் சில நாட்கள் கழித்து இன்றுதான் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com