பிரபல நடிகருக்கு ஒதுக்கிய கால்ஷீட்டை மாற்றிய தீபிகா..
கொரோனா காலகட்டம் திரையுலகைக் கவிழ்த்துப் போட்டுவிட்டது. பெரிய பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என்றில்லாமல் எல்லா பட்ஜெட் படங்களும் போட்ட திட்டப்படி படத்தை எடுத்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடிகர், நடிகைகளும் தாங்கள் கொடுத்த கால்ஷீட்டை மாற்றி வருகின்றனர் அல்லது படத்திலிருந்து வெளியேறுகின்றனர். விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி நடிப்பதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு வந்ததால் படப் பிடிப்பு தடைப்பட்டது.
அதிதி கொடுத்த கால்ஷீட்டை படக் குழு பயன்படுத்த முடியவில்லை. ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அதிதி வேறுபடத்துக்குத் தனது கால் ஷீட்டை ஒதுக்கி இருந்ததால் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பதிலாக ராஷி கன்னாவை ஒப்பந்தம் செய்தது படக் குழு. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடக்கிறது.
நடிகர் பிரபாஸ் ஒரே நேரத்தில் ஆதிபுருஷ், சலார் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் படம் என 3 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் நாகஸ்வின் படத்தில் பிரபா ஸுடன் தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கவிருந்தார். அதற்காக கால்ஷீட் ஒதுக்கி இருந்தார். ஆனால் இதற்கிடையில் சலார் படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்புக் கொண்டதுடன் அதன் படப்பிடிப்பில் உடனடியாக கலந்து கொள்ளவும் முடிவு செய்தார். சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். இவர் கே ஜி எஃப் படத்தில் இயக்குனர். பிரபாஸுக்கு ஒரு ஆக்ஷன் படம் உடனே தேவை என்பதால் இதில் உடனடியாக நடிக்கிறார்.
இதனால் நாக் அஸ்வின் இயக்கும் படம் தள்ளிப் போகிறது. தீபிகா கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்த முடியாத நிலை உருவானது. ஆனால் அதுபற்றி கவலைப்படாத தீபிகா, பிரபாஸ் படத்துக்கு ஒதுக்கிய கால்ஷீட் டை ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் படத்திற்கு ஒதுக்கி விட்டார். ஹிருத்திக் பைட்டர் என்ற படத்தில் நடிக்கிறார். அதில் தீபிகா நடிக்கிறார்.பிரபாஸுக்கு அடுத்து சலார் மற்றும் ராதே ஷியாம் படங் கள் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது.