தெலுங்கில் ரிலீஸாகும் `குற்றம் 23hellip ட்ரெய்லரை வெளியிட்ட பிரபாஸ்!
அருண் விஜய் நடிப்பில் தமிழில் ரிலீஸான திரைப்படமான `குற்றம் 23’ தெலுங்கில் வெளியாக உள்ளது. அதற்கான ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
கதையம்சம் உள்ள திரைப்படங்களை சமீப காலமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். அவரின் பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவது மட்டுமின்றி வசூலிலும் ஸ்கோர் செய்துள்ளது.
அப்படி அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்த படம்தான் `குற்றம் 23’. த்ரில்லர் படமான இதில் அருண் விஜய்யின் கலக்கல் நடிப்பால் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார். இந்நிலையில், இந்தத் திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு `க்ரைம் 23’ என்ற பெயரில் சீக்கிரமே ரலீஸ் ஆக உள்ளது.
இதன் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. `பாகுபலி’ புகழ் பிரபாஸ் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். தமிழில் சக்கைபோடு போட்ட `குற்றம் 23’ தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வரும் என்ற நம்பிக்கையில் திரைப்பட குழுவினர் `க்ரைம் 23’-ஐ ரிலீஸ் செய்ய உள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com