கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் எடியூரப்பாவுக்கு புதிய தலைவலி
கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. தற்போது முதல்வராக உள்ள எடியூரப்பா தனது அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார்.ஏழுபேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் நான்கு பேர் எம்.எல்.ஏ.க்கள். மூன்று பேர் எம்.எல்.சி.க்கள் ஆவர்.அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ.க..எம்.எல்.ஏ.க்கள் சிலர் எடியூரப்பாவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.சித்ரதுர்கா தொகுதி எம்எல்ஏவான எம்.எல்.ஏ. திப்பாரெட்டி நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
ஆனால் அதனால் எந்தப் பலனும் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்படாத எம்.எல்.சி.க்கள் சிலர் அமைச்சர்கள் ஆகிவிட்டனர் . 30 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வருகிறேன் . அமைச்சராக நினைத்தேன் நடக்கவில்லை எனப் புலம்பி இருக்கிறார்.விஜயபுரா எம்.எல்.ஏ. பசவனகவுடா வோ இன்னொரு படி மேலே போய் தன்னை பிளாக்மெயில் செய்து அவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுத்து இருக்கிறார் எடியூரப்பா என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் பா.ஜ.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். எடியூரப்பா குடும்பத்து வாரிசு அரசியலுக்கு பிரதமர் மோடி முடிவு கட்டவேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
பெங்களூரு மற்றும் பெலகாவி மாவட்டங்களை மட்டுமே அரசாங்கம் என்று நினைத்து விட்டார், எடியூரப்பா. மற்ற மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை என குற்றம் சாட்டி இருக்கிறார் ஹொன்னாலி தொகுதி எம்.எல்.ஏ.வான ரேணுகாச்சார்யா .அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள் இப்படி குற்றம் சாட்டுவது சகஜம்தான் என்றபோதிலும் வெளிப்படையாகவே எடியூரப்பாவுக்கு எதிராக அவர்கள் கருத்து தெரிவிப்பது அறிவித்திருப்பது எடியூரப்பாவுக்கு இன்னும் பெருத்த தலைவலியை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.