கொரோனா தடுப்பூசி: நாளை துவக்குகிறார் பிரதமர்
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி செயல்பாட்டை இந்தியாவில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக் கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.நாளை காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தைப் பிரதமர் மோடி காணொலி மூல. தொடங்கி வைக்கிறார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 6 இடங்களில் இத்திட்டம் காணொலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட உள்ளது.ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேர் வீதம் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நாளை இந்த ஊசி செலுத்தப்படுகிறது.படிப்படியாக நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.