குடும்ப நிகழ்வை படமாக்கிய இயக்குனர் தாயார் மரணம்..
சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். அதனால் முதல் நாள் படப்பிடிப்பு நடக்கும்போது சாமி கும்பிடும் சீன் அல்லது மகிழ்ச்சியான காட்சிகளைப் படமாக்குவார்கள்.இயக்குனர் சுசீந்திரன் படங்கள் சில அவரது சொந்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. அவர் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடி குழு அவரது தந்தை நடத்திய கபடி குழுவை மையமாக வைத்து உருவானது. அதன் பிறகு பல்வேறு படங்களை இயக்கினார்.
கடந்த 2020ம் ஆண்டில் அவர் இயக்கத்தில் படங்கள் எதுவும் வெளிவர வில்லை. ஆனாலும் ஈஸ்வரன் என்ற படத்த்தின் ஷூட்டிங் கை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினார். சிம்பு ஹீரோவாக நடித்தார். 28 நாட்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இப்படத்தில் சோழி உருட்டி குடும்பத்தினர் ஜாதகம் பார்ப்பதுபோல் காட்சி இடம் பெற்றிருக்கிறது. இதுபற்றி சுசீந்தரன் கூறும் போது, என் குடும்பத்தில் ஜோதிடம் பார்த்தபோது ஒரு உயிர் இந்த குடும்பத்திலிருந்து பிரியும் என்று ஜோதிடர் சொன்னார். அந்த சம்பவத்தை மனதில் வைத்துத்தான் ஈஸ்வரன் கதையை உருவாக்கினேன் என்றார்.
அப்போது ஜோதிடர் சொன்னது நடந்ததோ இல்லையோ ஈஸ்வரன் படம் வெளியான மறுநாள் சுசீந்திரன் குடும்பத்தில் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவரது தாயார் இன்று காலை காலமாகிவிட்டார்.பல படங்களை இயக்கியதுடன் தேசிய விருதும் வென்றவர் சுசீந்திரன், இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் நேற்று பொங்கல் தினத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.சுசீந்திரன் தாயார் ஜெயலட்சுமி இன்று காலை ஒட்டன்சத்திரத்தில் திடீர் மாரடைப்பில் காலமானார். அவருக்கு வயது 62. சசீந்திரன் தந்தை நல்லுசாமி. இவரது தம்பி தயாரிப்பாளர் நல்லு சாமி பிக்சர்ஸ் சரவணன். மேலும் ஒரு சகோதரரும் சகோதரியும் உள்ளனர். ஜெயலட்சுமி உடல் தகனம் இன்று மாலை நடக்கிறது.
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தலைவர் டி. ராஜேந்தர் வெளியிட்ட இரங்கல் செய்தியில். பிரபல இயக்குனர் சுசீந்திரன் தாயார் ஜெயலக்ஷ்மி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன். அம்மையாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.