பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிசு வழங்குவதில் பாகுபாடு என சர்ச்சை

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று விறுவிறுப்பாக நடந்தேறியது .இதில் இரண்டாம் பரிசு பெற்ற நபர் பரிசை வாங்க மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக அளவில் புகழ் பெற்றது. இதன்படி இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.இதில் மொத்தம் 674 காளைகள் களம் கண்டது. 600 க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 12 பேரும், காளை உரிமையாளர்கள்7 பெறும் பார்வையாளர்கள் 9 பேர் மற்றும் ஒரு போலிசார் உட்பட 29பேர் காயம் அடைந்தனர். இதில் 9 பேர் பலத்த காயம் அடைந்ததால் அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போட்டியில் மதுரை கருப்பாயூரனியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் 18 காளைகளைப் பிடித்து முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார்.மதுரை மாவட்டம் பொதும்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் 17 மாடுகளைப் பிடித்து இரண்டாம் பரிசை பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஆனால் பிரபாகரன்தாம் தான் அதிக காளைகளைப் பிடித்ததாகவும் தனக்குத்தான் முதல் பரிசு தர வேண்டும் வீடியோ பதிவைப் பார்த்துவிட்டு பரிசு கொடுங்கள் என்று சொல்லிவிட்டு பரிசுகளை வாங்காமல் சென்றுவிட்டார். இதனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட இருந்த பரிசுப் பொருட்கள் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News >>