கமல் கையில் மீண்டும் டார்ச் லைட்
நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் துவக்கிக் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் பல தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது. அக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வரவிருந்த வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட வில்லை. மாறாகப் புதுச்சேரியில் மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.
எனவே தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரான, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் மக்கள் நீதி மையம் இதற்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.234 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் இது குறித்து கமல் டுவிட்டரில், ஒதுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது ,இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு இருப்பவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.