மேக்னாவுக்கு குட்டிப்பாப்பாவின் 3 டி மோல்ட் பரிசு..
நடிகை மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் அறிமுகமானார். அடுத்து சில படங்களில் நடித்தவர் மலையாள, கன்னட படங்களில் நடித்தார்.கன்னடத்தில் நடித்தபோது நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது, இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அப்போது மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் திரையுலகையும் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கணவரின் மரணம் மேக்னாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியபோதும் வயிற்றிலிருக்கும் குழந்தைக்காகப் பேரிடியையும் தாங்கிக்கொண்டார். அவருக்கு குடும்பத்தினர் ஆதரவாக நின்றனர். அது மேக்னாவுக்கு தைரியத்தை அளித்தது. சில மாதங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் வந்து பிறந்திருப்பதாக குடும்பத்தினர் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். கணவரின் இழப்பு மனதைப் பாதித்தாலும் குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் மேக்னா. எந்த தருணமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சிரஞ்சீவி சார்ஜா மனைவியிடமும், குடும்பத்தினரிடம் கூறுவ துண்டு அதை குடும்பத்தினரும் பின்பற்றி வருகின்றனர்.
பொங்கல் தினத்தை மேக்னா எளிமையாகக் கொண்டாடினார். அவரது நெருங்கிய நண்பர்கள் பிரிவால் தேவராஜ் மற்றும் ராகினி பிரிவால் நடிகை மேக்னாவுக்கு பொங்கல் பரிசு அனுப்பி வைத்தனர். பார்சலில் வந்த அந்த பரிசை பிரித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் மேக்னா ராஜ். அந்த பார்ச்லை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து பரிசு அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.நண்பர்கள் அனுப்பிய மெசேஜில் "அதிகாரத்தில் இருக்கும் பெண்ணுக்கு, எங்களிடமிருந்து உங்களிடம், சில இனிப்பும் புளிப்பும் கலந்த அன்பை உங்களுக்கு அனுப்புகிறேன். அதிர்ஷ்டமும் நல்ல அதிர்வும் உண்டாகட்டும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என பிரிவால் மற்றும் ராகினி குறிப்பிட்டிருந்தனர். அந்த மெசேஜை கண்ட மேக்னா, இனிப்பான மெசேஜ் அவ்வளவு அருமை குருஜி. நன்றி எனத் தெரிவித்திருந்தார்.மேக்னா ராஜ் குழந்தைக்குப் பிறந்து தற்போது 5 மாதம் ஆகிறது. மேக்னாவுக்கு மற்றொரு தோழி குழந்தையின் முப்பரிமாண (3டி) கை, கால் மோல்டுகளை அளித்தார். அந்த பரிசு புகைப்படத்தையும் பகிர்ந்து மேக்னா நன்றி தெரிவித்தார்.