இயக்குனர் கே.பாக்யராஜ் புதிய பரிமாணம்..

இயக்குனர் கே.பாக்யராஜ் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படங்களைத் தந்தவர். முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், டார்லிங் டார்லிங் டார்லிங் என அவர் அளித்த படங்கள் இன்றைக்கும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அவரின் முந்தானை முடிச்சு படம் தற்போது சசிகுமார் நடிப்பில் ரீமேக் ஆகிறது.பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக கே.பாக்யராஜ் பணியாற்றிய முதல் படம் 16 வயதினிலே.பெரிய வெற்றியை பெற்றதுடன், தமிழ் சினிமாவின் களத்தைப் புரட்டிப் போட்டது.பிறகு பாரதிராஜாவின் இரண்டாவது படமாக வெளியானது கிழக்கே போகும் ரயில். இதுவும் சூப்பர் ஹிட் திரைப்படம் தான்.

சுதாகரையும் ராதிகாவையும் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. வசூல் சாதனையும் புரிந்தது இந்த ரயில். படமாக்கப்பட்ட விதமும் க்ளைமாக்ஸ் காட்சியும் பலராலும் பேசப்பட்டது. படத்தில், ஆங்காங்கே சில காட்சிகளில் வருவார் பாக்யராஜ். ஆகவே, நடிகர்களின் பெயர்ப் போடும் போது, கே.பாக்யராஜ் என்று டைட்டிலில், பத்தோடு பதினொன்றாக இவரின் பெயரும் இடம்பெறும். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்ததால், டைரக்‌ஷன் உதவி கே.பாக்கியராஜ் என்று இவரின் பெயர் இடம் பெற்றது. கிழக்கே போகும் ரயில் படத்துக்கு, கதை வசனம் ஆர்.செல்வராஜ் எழுதியிருப்பார். கூடவே உதவி வசனம் என்று கே.பாக்யராஜ் என்று டைட்டிலில் பெயர் வரும்.

திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் தனி முத்திரையைப் பதித்த இவர் கடந்த இருபது ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். வாங்க சினிமாவைப் பற்றிப் பேசலாம் என்கிற சிறந்த புத்தகத்தை எழுதிய இவரது கைவண்ணத்தில் நீங்க நெனச்சா சாதிக்கலாம், உங்கள் பாக்யராஜின் கேள்வி - பதில் எனப் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன . இவர் இப்போ புதுசா ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பித்திருக்கிறார்.சினிமா, பத்திரிகை துறைகளில் இருந்தவர் தற்போது டிஜிட்டல் மீடியா என்ற புதிய பரிமாணத்திற்கு வந்திருப்பதற்கு திரையுலகினர் அவருக்கு வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.

More News >>