சிராவயல் மஞ்சு விரட்டு : இருவர் பலி
சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.இதற்காக சிராவயல் கிராம மக்கள் கோவில் மாடுகளுடன் கோவில்களில் வழிபட்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக திடலுக்கு வந்தனர்.உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.மஞ்சு விரட்டு நிகழ்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ,திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் 117 காளைகள் பங்கேற்றது. 100 வீரர்கள் களத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கே திரண்டிருந்தனர்.
மைதானத்திற்கு வெளியே கட்டுமாடுகளாக நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காளைகள் திடீரென அவிழ்த்து விடப்பட்ட த்ததால் பார்வையாளர் பலர் காயமடைந்தனர்தொழு மாடுகளுக்கு முன்பாக கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில் 60 வயது முதியவர்களான பெரியாமச்சன்பட்டியை சேர்ந்த போஸ் மற்றும் கள்ளிப்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் ஆகிய இருவர் காளைகள் குத்தியதில் பலியாகினர்.
இது தவிர இந்த நிகழ்ச்சியைகாண இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருகோஷ்டியூர் அருகே வாணியங்காடு என்ற இடத்தில் விபத்தில் சிக்கினர்.இதில் ஒருவர் பலியானார்.காளையார்கோவில் அருகே குருந்தனியில் இருந்து வேகமாக வந்த பைக் நடந்து சென்றவர்கள் மீது மோதியது இதில் பைக்கை ஓட்டி வந்த கண்ணதாசன் நம்பர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.