கண்பார்வையில் தடுமாற்றமா? சர்க்கரை வியாதியின் உருமாற்றமாக இருக்கலாம்!
சிலருக்கு சம்பந்தமே இல்லாமல் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என ஏற்படும். நாம் ஏதாவது முறையில்லாமல் சாப்பிட்டிருப்போம் என உங்கள் கற்பனை மருத்துவரைக் கட்டுக்குள் வைத்துவிட்டு முறையான வைத்தியம் எடுத்துக்கொள்வது நல்லது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது சில நேரங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றி வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். முன்னரே சக்கரை வியாதி இருக்கிறது என்றால் வெயிலில் அதிகம் சென்று வந்தால் கூட நீர்ச்சத்து குறைந்து வாந்தி, மயக்கம் ஏற்படும். குறிப்பாக உடலில் நீர்ச்சத்து வற்றினாலே ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவில் மாற்றம் ஏற்படும்.
சர்க்கரை வியாதியின் அறிகுறியாகவும் இருக்கலாம். சர்க்கரை வியாதி இருப்பவர்கள், ரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை சரியாக கவனிக்காமல் கட்டுக்குள் வைக்காமல் இருந்தாலும் கண் பார்வையில் தடுமாற்றம் ஏற்படும்.
ரத்ததில் உள்ள க்ளுக்கோஸ் அளவு உயரும் போது அது கண்ணின் விழித்திரையைப் பாதித்து கண் பார்வையை மங்கலாக்கும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் போது இந்த நிலை சரியாகிவிடும் என்பது மருத்துவர்களின் முக்கிய ஆலோசனை.
மேற்சொன்ன அறிகுறிகளில் பல அடிக்கடி தென்படலாம். சில நேரம் குறைவாகலாம். ஆனால், இந்த அறிகுறிகள் அனைத்தும் அதனதன் அளவீடுகளிலிருந்து உயரும் முன் சரியான மருத்துவரை சரியான நேரத்தில் சந்தித்து ஆலோசனைப் பெறுவது அவசியம் என்பதே மருத்துவர்களின் முதல் யோசனையாகக் கூறப்படுகிறது.