இந்தியா மீது பொருளாதார தடை.. அமெரிக்க திடீர் மிரட்டல்!

சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது மத்திய அரசு. 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 2019ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி முதல்கட்டமாக 800 மில்லியன் டாலரை இந்தியா ரஷ்யாவிடம் கொடுத்துவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் முதல் ஏவுகணை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்த எஸ்-400 ஏவுகணைகளை வாங்கக் கூடாது என அமெரிக்க திடீர் மிரட்டல் விடுத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள அமெரிக்கத் தூதர், `` எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ரஷ்யா - இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரியும். தளவாடங்களை ரஷ்யா ஒப்படைத்தால் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

More News >>