ஆசிஃபா பலாத்காரம் செய்த பின்னர் ஜெய் ராம் கோஷம்!
ஆசிஃபா பலாத்காரம் செய்த பின்னர் ஜெய் ராம் கோஷம் கோஷமிட்டுள்ளதன் மூலம் சிதைத்தவர்கள் சங் பரிவார போலி ராம பக்தர்கள் என்பது நிச்சயமாகிறது என்று எழுத்தாளர் அருணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 10, 2018 அன்று எட்டு வயது ஆசிஃபா பானு, ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் அன்று காணாமல் போனாள், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அசிபாவின் உடல் ஜனவரி 17, 2018 அன்று கிடைத்தது.
அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவளது தோள்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தது. அசிபாவை பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து அவள் மீது மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள்.
இந்த மொத்த செயலையும் செய்தவர்கள் காஷ்மீரில் வசிக்கும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் அதில் காவல் அதிகாரி ஒருவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள கட்டுரையாளர் அருணன், “ஒரு குழந்தை வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் கொடுக்கப்பட்டன என்றால் அவர்கள் பாகிஸ்தானிய ஏஜென்டுகளாகத்தான் இருக்க வேண்டும்” என்று ம பி பாஜக மாநிலத் தலைவர் நந்தகுமார் சிங் சவுகான் கூறியிருக்கிறார்.
ஆக அந்த கொடூரத்தை கொண்டாடும் வகையில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டிருக்கிறார்கள் என்பது பாஜகதலைவர் வாயிலாகவே தெரிய வருகிறது. இது பாகிஸ்தானின் வேலை என்றால் அதைச் செய்தவர்களுக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் பாஜக அமைச்சர்கள் இருவர் ஊர்வலம் போனது ஏன்? அவர்களும் பாகிஸ்தானிய ஏஜென்டுகளோ?
குழந்தை ஆசிபாவை கெடூரமாக சிதைத்தவர்கள் சங் பரிவார போலி ராம பக்தர்கள் என்பது நிச்சயமாகிறது. செய்வதையும் செய்துவிட்டு பாகிஸ்தான் பெயரை சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். இந்த கொடூரத்தின் நோக்கம் முஸ்லிம்கள் நெஞ்சில் பயத்தை உருவாக்கி அவர்களை விரட்டுவதுதான் என்று இன்று டிஒஐ [TOI] ஏட்டிலும் செய்திக்கட்டுரை வந்துள்ளது.
இப்படி வகுப்புவாத நோக்கில் ஒரு குழந்தையை நாசம் செய்துவிட்டு “விஷயத்தை வகுப்புவாத நோக்கில் பார்க்க கூடாது” என்கிறார் பாஜகவின் விஜய் கோயல், என்னே இவர்களின் தந்திரம்!” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com