`ஸ்ரீதேவி நடிகை மட்டுமல்லhellip- தேசிய விருது குறித்து உருகும் போனி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சென்ற ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது கணவர் போனி கபூர் உருக்கமான ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். 65-வது இந்திய தேசிய விருது பட்டியலை நேற்று அரசு வெளியிட்டது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இந்தியில் வெளியான `மாம்’ திரைப்படத்தில் அவரின் சிறந்த நடிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு விருது வழங்கப்பட்டது குறித்து உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார் அவரது கணவர் போனி கபூர்.
கபூர் தனது ட்வீட்டில், `ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்படுவது குறித்து எங்கள் குடும்பம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. அவர் எப்போதும் கச்சிதத்தன்மையுடன் வேலை செய்பவர். இது அவர் நடித்த 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் அனைத்திலும் வெளிப்பட்டது.
அவர் வெறுமனே சிறந்த நடிகை மட்டுமல்ல. சிறந்த அம்மா, சிறந்த மனைவியும் ஆவார். இது அவரின் நடிப்பைக் கொண்டாடுவதற்கான நேரம். அவர் இன்று நம்மோடு இல்லை. ஆனால், அவரின் திரைப்படங்கள் என்றென்றும் நம்மோடு இருக்கும்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com