அஜீத்தை பார்த்ததும் மீண்டும் அப்டேட் கேட்கும் ரசிகர்கள்..
நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தடைபட்டது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமானது. அத்துடன் படம் நின்றது. ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி கொடுததும் பிற படங்கள் தொடங்கிய நிலையில் வலிமை படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருப்பில் இருந்தது. அக்டோபார் மாதம் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது அஜீத் கலந்துகொண்டு நடித்தார். இப்படத்தை சிவா இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக ஹூமா குரோஷி நடிக்கிறார். இவர் காலா படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்த பாலிவுட் நடிகை.
மீண்டும் வலிமை படம் மூலம் தமிழில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியில் அஜீத் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் அஜீத்துக்கு காலில் அடிபட்டது. அதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு உடனே அந்த காட்சியை முடித்துக் கொடுத்தார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்நிலையில் அஜீத் தனது நண்பர்கள் சிலருடன் சமீபத்தில் வாரணாசி சென்றார். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பிறகு சரித்திரபுகழ் பெற்ற சாரநாத்துக்கு சென்றார். அவர் அங்குள்ள இடங்களுக்கு நடந்தும் மோட்டார் சைக்கிளிலும் சென்றார்.
வாரணாசியில் தெருக்கடைகளில் நண்பர்களுடன் உணவை ருசிபார்த்தார். மாஸ்க், தொப்பி அணிந்திருந்ததால் அவரை யாரும் உடனே அடையாளம் காணவில்லை. தொப்பியை கழற்றியபோது கடைக்காரர் அவரை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்றார். அஜீதுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த படங்கள் நெட்டில் வெளியாகி வைராலாகி வருகிறது. கிளீன் ஷேவ் செய்து பளிச்சென இருந்தார் அஜீத். அஜீத்தின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு மெஜேஜ் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக படத்தின் அப்டேட் கேட்டும் தரப்படாதால் ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். புத்தாண்டு அல்லது பொங்கல் நாளில் அப்டேட் வரும் என்று எதிர்ப்பார்த்து அதிலும் ஏமாற்றம் ஏற்பட்டதாக அவர்கள் குறை கூறுகின்றனர்.