ஆப் மூலம் திருமணத்திற்கு மொய் வசூல்: மதுரையில் புதுமை
பழமையின் புதுமை படைப்பதில் மதுரைக்கு தான் முதலிடம். ஏற்கனவே திருமண வீட்டில் மொய் எழுதுபவர்களுக்கு ரசீது வழங்கும் ஒரு சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியது மதுரைக்காரர்கள்தான். இப்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு படி மேலே போய் போய் வசூலிக்க செயலிகள் மூலம் வசூலிக்க முடியும் என்று புதிய அத்தியாயத்தை வைத்திருக்கிறார்கள் மதுரை வாசிகள் நாகரீகமும் தொழில் நுட்ப வளர்ச்சியும் எதையும் விட்டு வைக்காது என்பதற்கு உதாரணம் இன்று மதுரையில் நடந்த ஒரு திருமணம்.
வழக்கமாக திருமணத்திற்கு மொய் கொடுப்பவர்கள் கவர்களில் பணத்தை வைத்து கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த திருமணத்தில் கவர் வைப்பதற்கு பதிலாக பதிலாக ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது பலரையும் கவர்ந்தது. மதுரையில் சிவசங்கரி சரவணன் இருவருக்கும் நடந்த திருமணத்தில் தான் இந்த வினோதம் அரங்கேறி இருக்கிறது. மணப்பெண் சிவசங்கரி பெங்களூரில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிகிறார் மணமகன் சரவணன் சிவில் இன்ஜினியர்.
இவர்கள் இருவருக்கும் இன்று மதுரை அனுப்பானடியில் திருமணம் நடந்தது. மணமகன் மணப்பெண் சிவசங்கரியின் வீட்டிற்கு மொய் செய்வோருக்கு வசதியாக கூகுள் பே மற்றும் போன் பீ ஆகிய இரண்டு செயலிகளில் பார்கோட் உருவாக்கப்பட்டு அவை அழைப்பிதழில் ஒட்டப்பட்டது. மொய் செய்பவர்கள் அந்த பார்கோடை தங்களது மொபைல் போனில் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தினர். இந்த மதுரைக்காரர்கள் இன்னும் என்னவெல்லாம் புதுமை படைக்க போகிறார்களோ?.. தெரியவில்லை