`உங்க குழந்தைக்கு இதய சிகிச்சை செய்யனுமா..? நான் இருக்கேன்!- லாரன்ஸின் ஸ்பெஷல் வாழ்த்து
நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு வித்தியாசமான, அதே நேரத்தில் நெகிழவைக்கும் விதத்தில் ஒரு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.
இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸும் ஒரு ஸ்பெஷல் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.
ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு லாரன்ஸ், `எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் 145-வது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த புகைப்படத்தில் இருப்பது கவின்குரு. இவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது.
ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்ட கவின்குருவின் பெற்றோர்கள், இவரை நம்மிடம் அழைத்து வந்தார்கள். கவின்குருவின் இதயத்தில் இருந்த பிரச்னை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கவின்குருவைப் போல இதய அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழை குழந்தைகள் உங்களுக்குத் தெரிந்தால், என்னைத் தொடர்பு கொள்ளவும்’ என்று பதிவிட்டு நெகிழ் வைத்துள்ளார். புகைப்படத்துடன் தொடர்பு கொள்வதற்கான மொபைல் எண்ணையும் இணைத்துள்ளார் லாரன்ஸ். ஷேர் செய்யுங்கள் மக்களே. யாராக்காவது பயன்படும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com