நிழல் நிஜமானது.. வெண்ணிலா கபடி குழு படகாட்சி போல விளையாடும் போதே கபடி வீரர் பலி

வெண்ணிலா கபடி குழு படத்தில் கிளைமாக்ஸில் ஹீரோ விஷ்ணு கபடி விளையாடி கொண்டே தனது உயிரை விடுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோன்று நிஜமான சம்பவம் போன்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று நடந்தது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், கங்கண்ணபள்ளி, வள்ளூரு என்ற ஊரில் பொங்கலையொட்டி இன்று கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கடப்பா மாவட்டம் சென்னூர் மண்டலம் கொண்டபேட்டைச் சேர்ந்த நரேந்திரா நரேந்திராவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

எம்.காம். பட்டதாரியான இவருக்கு கபடி என்றால் மிகவும் உயிராம். எனவே தான் போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டாராம். போட்டியின் போது நரேந்திரா எதிரணியினரை நோக்கி சென்றார். அப்போது எதிர் அணி உறுப்பினர்கள் அவரை பிடித்து கீழே தள்ளி அவர் மீது விழுந்தனர். நரேந்திரா கபடி கபடி என்று சொல்வதை நிறுத்திய பிறகு எதிர் அணியினர் எழுந்தனர். அதன்பின் எழுந்து நின்ற நரேந்திரா ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் சரிந்து விழுந்தார்.

உடனடியாக நரேந்திராவை கடப்பா அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். நரேந்திராவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கபடி போட்டியில் பங்கேற்று நிச்சியம் கோப்பையுடன் வருவேன் என்று கூறி சென்ற தங்கள் மகன் சடலமாக வருவான் என்று எண்ணி பார்க்கவில்லை என நரேந்திராவின் பெற்றோர்கள் கதறி அழுதது பலரையும் கண்கலங்க செய்தது.

More News >>