உரிமையைப் பெற போராட்டம் மேலாண்மை வாரியம் அமைக்க முழக்கம் - ரஜினி, கமல் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டை ஒட்டி நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், ”உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள்”. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ”உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில் அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என உறுதி ஏற்போம். மத்திய மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனததை பின்பற்றி , தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம் . தமிழர் தமிழால் இணைவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>