கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு பக்கவிளைவு.. பீதியில் மக்கள்..
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு பக்கவிளைவு உள்ளதாகவும், அதில் 3 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 9 மாதங்களாக கொரோனா நோய் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகனது. இந்த கொடிய நோய்க்கு தீர்வு தேடி அரசாங்கமே சோர்ந்து விட்டது. இந்நிலையில் பல ஆய்வாளர்கள் ஒன்று திரண்டு கொரோனவை அழிக்க தடுப்பூசியை கண்டுபிடித்தனர். இதற்க்கு கோவிஷீல்டு என்று பெயரிப்பட்டது. இந்த தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை செய்ய 6 மாதமாக பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள பலர் முன்வந்தனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம்,அருணாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் போன்ற மாவட்டங்களில் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதியில் இருந்து தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. நேற்று 17,702 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 447 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அது மட்டும் இல்லாமல் அவர்களில் மூன்று பேருக்கு காய்ச்சல், குமட்டல், தலைவலி போன்ற அறிகுறி தென்பட்டதால் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.