ஜன.21ம் தேதி திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது.தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் இப்போதே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ஜன.21ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். அதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளர்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. தேர்தல் பணிகள் குறித்தும், மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகளின் பலம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.