நடிகரை காதலிக்காதது ஏன்? நடிகை டாப்ஸி சொன்ன சீக்ரெட்..
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த வந்த டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி திரையுலகம் என்றாலே கவர்ச்சிக்கு முக்கியத்துவம் என்ற நிலையில் டாப்ஸி அதிலிருந்து மாற்பட்டு தனது பயணத்தை அமைத்திருக்கிறார். பிங்க் போன்ற வித்தியாசமான கதை அம்சமுள்ள படங்கள் அல்லது பிரபலங்களின் வாழ்க்கை சரித்திர படங்களை தேர்வு செய்கிறார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த சந்திர தோமர், பிரகாஷி தோமர் என்ற துப்பாக்கி சுடுவதில் சாதனை புரிந்த வயதான பெண்களின் வாழ்க்கை கதையாக உருவான சாந்த் கி ஆங்க் என்ற படத்தில் பிரகாஷி தோமர் கதாப்பாத்திரம் ஏற்று நடித்தார். தற்போது தடகள வீராங்கனை ஒருவரின் வாழ்கையாக உருவாகும் ராஷ்மி ராக்கெட் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகைகளில் சிலர் உடன் நடிக்கும் நடிகர்கள் அல்லது பட தயாரிப்பாளர், இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனாலும் சில நடிகைகள் சினிமாவுக்கு சம்பந்தப்படாதவர்களை மணக்கின்றனர். நடிகை டாப்ஸி இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர். சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தனது சொந்த விஷயங்கள் சினிமாவோடு இணைக்காமல் அதை தனியாகவே பராமரித்து வருகிறார். டென்மார்க்கை சேர்ந்த பேமிண்டன் வீரர் மதியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறர். சமீபத்தில் அவருடன் மாலத்தீவு சென்று தங்கி இருந்த டாப்ஸி ஜோடியாக படத்தை வெளியிட்டார். டாப்ஸி தற்போது நடித்து வரும் ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பு இம்மாதம் முடிவடைகிறது. இதுபற்றி அவர் கூறியதாவது: லாக்டவுனுக்கு முன்பு சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
அந்த படங்களின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிந்துவிடும். அதன்பிறகு லாக்டவுனில் ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும். வரும் மார்ச் மாதம் அனுராக் கஷ்யாப் படத்தில் நடிக்க உள்ளேன். சமூக வலைதளத்தில் நான் ஆக்டிவாக இருந்தாலும் அதில் எனக்கு பிடிஏ செய்ய பிடிக்காது. எனக்கு தெரிந்தவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துவேன். மதியாஸ் போவுக்கும் அப்படித்தான் வாழ்த்து தெரிவித்தேன். சினிமாவையும் எனது தனிப்பட்ட வாழ்கையும் பிரித்து வைக்கவே விரும்புகிறேன். அதனால்தான் சினிமாவில் யாரையும் நான் காதலிக்கவில்லை. திரையுலகில் இன்னும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த ஆண்டு எனது நடிப்பில் 6 படங்கள் வெளியாகும்.
நான் எதையும் வேண்டுமென்று மறைத்தது கிடையாது. வெளிப்படையாக பேசுவேன். பந்தா பண்ணவும் பிடிக்காது. சினிமாவில் டாப்ஸி சாதித்தார் என்று கூறும்போது நான் எனது பட எண்ணிக்கையை குறைத்துக்கொள்வேன். அப்பொது இரண்டு அல்லது மூன்று படங்கள் வருடத்துக்கு நடிப்பேன். இவ்வாறு டாப்ஸி கூறினார். பாலிவுட்டை பொறுத்தவரை யாரிடமும் டாப்ஸி வம்புதும்புவுக்கு போகாவிட்டாலும் அவரை தேடி வம்பு தும்பு வருகிறது. அடிக்கடி டாப்ஸி வம்புக்கு இழுப்பவர் கங்கனா ரனாவத்தான் சமீபத்தில் கூட டாப்ஸி ஒரு புகைப்படத்துக்கு அளித்திருந்த போஸ் குறித்து கங்கனா தாக்கி கருத்து வெளியிட்டார். தன்னுடைய ஸ்டைலை அவர் காப்பி அடிப்பதாக தெரிவித்தார். அதற்கு டாப்ஸியும் பதிலடி தந்திருந்தார்.