`பேட் மட்டுமல்ல துப்பாக்கியும் கையில் விளையாடும்!- இது தோனியின் அதிரடி
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒரு மாஸான வீடியோவை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர், குடும்ப பொறுப்பு, விளம்பரங்களில் நடிப்பது என்று கேப்டன் கூல் தோனி படு பிஸியாக உள்ளார். ஆனால், இந்த மாதிரி சமயத்திலும் அவருக்கு பிடித்த ஒரு விஷயத்தைச் செய்ய நேரம் ஒதுக்க முடிந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் கௌரவப் பதவி வகிப்பவர் தோனி. அவருக்கு சிறு வயது முதலே ராணுவத்தில் சேறுவது மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாக இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பத்மபூஷன் விருது வாங்கும் போது கூட, ராணுவ சீறுடையிலேயே வந்தார். இது சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ் அள்ளியது.
இந்நிலையில் தோனி, தான் துப்பாக்கி சுடும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுடன், `விளம்பரத்துக்கான ஷூட்டிங்கை விட, இந்த ஷூட்டிங் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். வீடியோவிலும் தன் இலக்கை குறி வைத்து சுட்டு அசத்தியுள்ளார் கேப்டன் கூல்.