நாக்கில் எச்சில் ஊறும் முட்டை ஆம்லெட் குழம்பு செய்வது எப்படி??
சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை சமைக்க சிறிது தாமதம் ஆகும். ஆனால் முட்டை ஆம்லெட் குழம்பை வெறும் 20 நிமிடத்தில் செய்து விடலாம். அதுவும் இதனை சாதம், இட்லி, தோசை போன்ற அனைத்து உணவுக்கும் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும். சரி வாங்க முட்டை ஆம்லெட் குழம்பு எப்படி சுவையாக செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-முட்டை - 4 உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - தேவையான அளவு வெங்காயம் - 1தக்காளி - 2 காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன் சீரகப் பொடி - 2 ஸ்பூன் கரம் மசாலா - 1ஸ்பூன் மல்லித் தூள் - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு சர்க்கரை - தேவையான அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன்சீரகம் - ஒரு ஸ்பூன்பட்டை - ஒரு துண்டு ஏலக்காய் - 3
செய்முறை:-ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ள வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அதில் கலந்து வைத்த முட்டையை ஊற்றி வேக வைக்கவும்.
வெந்த பிறகு ஆம்லெட்டை ரோல் செய்து கொள்ளவும். பிறகு அதை சிறிது துண்டாக வெட்டி தனியாக எடுத்து வைக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் போன்றவை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர், அரைத்த கலவை சேர்த்து சிறிதளவு சர்க்கரை தூவி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கடைசியில் ஆம்லெட்டை சேர்த்து கிளறினால் சுவையான முட்டை ஆம்லெட் குழம்பு தயார்.