இந்தியா 1விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் வெற்றி பெற இன்னும் 233 ரன்கள் தேவை

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 41 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்தியா 59 ஓவர்களில் 233 ரன்கள் எடுக்க வேண்டும்.பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவுடனான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்தியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 336 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 33 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய 2வது இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான சிராஜ் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 294 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 328 என்ற வெற்றி இலக்குடன் இந்தியா நேற்று 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று ஆட்டநேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 4 ரன்களுடனும், சுப்மான் கில் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். மழை காரணமாக நேற்று 2 முறை ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்சின் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு சுப்மான் கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். கில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் அரைசதத்தை கடந்தார். உணவு இடைவேளையின் போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 41 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மான் கில் 72 ரன்களுடனும், புஜாரா 11 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 59 ஓவர்களில் 233 ரன்கள் எடுக்க வேண்டும்.

More News >>