தீக்குளித்த வைக்கோவின் உறவினர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் தீக்குளித்த வைக்கோவின் உறவினர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கொந்தளித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் சீமானுக்கும், வைகோவிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், நாம் தமிழர் கட்சியினர் வைகோவிற்கு எதிரான மீம்ஸ்களை பதிவு செய்தனர்.
வைகோவை பற்றிய அவதூறான மீம்ஸ்களை கண்ட வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் மனமுடைந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 5 மணிக்கு சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 90 சதவீதம் தீ காயங்களுடன் சரவண சுரேஷை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதில், சரவண சுரேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் வைகோவின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com