சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் கட்: குஜராத் அரசு அதிரடி
சொத்து விவரம் குறித்து தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கான சம்பளம் வழங்கப்படாது என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில அரசில் வகுப்பு 1 மற்றும் 2 நிலையில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் 2017&2018ம் ஆண்டுக்கான சொத்து விவரத்தை கடந்த 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசு கெடு விதித்து இருந்தது.
இதில், 12 ஆயிரம் அதிகாரிகளில் இன்னும் 3 ஆயிரம் பேர் இன்னும் சொத்து விவரம் தாக்கல் செய்யவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனால், இந்த அதிகாரிகளுக்கான ஏப்ரல் மாதம் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாநில நிதித்துறைக்கு, பொது நிர்வாகத்துறை கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்த வாரத்திற்குள் சொத்து விவரக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அல்லது அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com