படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகை.. மருத்துவமனையில் அனுமதி..
புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்தினருடன் முடித்துக் கொண்டு ஷூட்டிங்கிற்கு தயாரான அலியாபட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியவாடி படப்பிடிப்பில் பங்கேற்கச் சென்றார். கடந்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினார். இருப்பினும், நேற்று முன்தினம் படப்பிடிப்பில் காட்சிகள் பிஸியாக படமாகிக்கொண்டிருந்தது. திடீரென்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. என்ன ஏதென்று தெரியாமல் படக் குழுவினர் தடுமாறினர்.
அலியாபட் கடுமையான பணி மற்றும் உடல் சோர்வு காரணமாக மயக்க நிலைக்குச் சென்று மயங்கி விழுந்தது தான் காரணம் என்று தெரிந்தது. உடனடியாக காரில் அலியா பட்டை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றனர்.படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது பற்றி அப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடிக்கும் மூத்த நடிகை சீமா பஹ்வாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது அவர் யூகமாக சில தகவல் சொன்னார். அவ்ர் கூறும்போது, நான் அந்த நாளில் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. இருப்பி னும் படத்தின் படப்பிடிப் பைத் தவிர வேறு ஏதேனும் காரணங்களுக்காக அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
சஞ்சய் லீலா பன்சாலியை பொறுத்தவரை யாரையும் டென்ஷனாக்க மாட்டார், சீக்கிரம் காட்சி முடிக்க வேண்டும் என்று அவசரப் படுத்தமாட்டார். அவருக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானித்து அதை மட்டுமே எடுப்பார். அவர் மிகவும் தெளிவானவர் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே படமாக்குவார். படத்தின் படப்பிடிப்பைப் பொருத்தவரை விஷயங்கள் எல்லாமே சீராக இயங்கின. இந்த படம் பெரும்பாலும் புறநகர் மும்பையில் உள்ள ஒரு தொகுப்பில் படமாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 90 சதவீதம் படங்கள் முடிந்து விட்டன, சில பாடல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்றார். ஆனால் படத் தரப்பினர் சிலர் கூறும்போது,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலியாபட் வாந்தி எடுப்பது போல் குமட்டலால் அவதிப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் அலியா குணமடைந்து அதே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மறுநாள் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றனர் வரும் தீபாவளி வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தில் அலியா கங்குபாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சிறு வயதிலேயே விபச்சாரத்தில் தள்ளப்பட்ட ஒரு பெண் பின்னர் அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடிதனத்துடன் அதிகாரம் செலுத்தும் ஒரு பெண் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் அலியாபட். அலியாபட் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ராஜ மவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிக்கிறார். கடந்த நவம்பர் மாதம் அவர் ஐதராபாத் வந்து படப் பிடிப்பில் கலந்துகொண்டார் அவர் நடித்த முக்கிய காட்சி கள் படமாக்கப்பட்டது. ஜனவரியில் ராம் சரண் உடன் நடிக்கும் காட்சி படமாவதாக இருந்தது. திடீரென்று ராம் சரணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. சிகிச்சை தனிமைப்படுத்தலுக்குப் பிறகு சமீபத்தில் ராம் சரண் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தார். படப் பிடிப்பு தொடங்கியவுடன் அதில் கலந்துகொள்ள உள்ளார். அலியாபட்டும் அவருடன் நடிக்க உள்ளார்.