வேத வாக்காக மாறிய சுனில் கவாஸ்கர் வார்த்தைகள்.. கணிப்பின் உச்சம்!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 9-வது முறையாக இந்தியா கைப்பற்றியது. ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ச்சியாக 2-வது முறையாக இந்தியா சாதனை படைத்தது.

இதற்கிடையே, இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ள காபா மைதானம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கோட்டையாக இருக்கலாம். ஆனால் அங்கும் இந்திய அணியின் வெற்றிக்கொடி பறக்கும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், காபா டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

கவாஸ்கர் வார்த்தைகள் வேத வாக்காக மாறியதுபோல் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை காபா மைதானத்தில் பதிவு செய்துள்ளது. கடந்த 1988 முதலே காபா மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. இன்றைய தோல்விதான் ஆஸ்திரேலியா அணிக்கு முதல் தோல்வி. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை இந்தியா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>