இந்தியர்களை இனி குறைத்து மதிப்பிடவே மாட்டோம்.. 4 டெஸ்ட், 2 சீரிஸ் தோற்ற பின் ஜஸ்டின் லாங்கர்!
ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடவே மாட்டோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று கோப்பையை தட்டி சென்றது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பல நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து காயத்தினால் தொடரிலிருந்து விலகிய போதும் இளம் வீரர்கள் இந்தியாவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய டிவி சேனலுக்கு பேட்டி அளித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடவே மாட்டோம். மொத்தமாக 1.5 பில்லியன் இந்தியர்களில் முதல் 11 பேரிடம் விளையாடுவது கடினம் தான் என்றும் தெரிவித்துள்ளார். ஜஸ்டின் லங்கர் பேட்டிளித்த வீடியோ காட்சி தற்போது, வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.