இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரில் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகளை வென்று அசத்திய இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது. இதற்கான உத்தேச அணியை சேதன் சர்மா தலைமையிலான தேர்வர்கள் குழு இன்று அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்று முன்னிலையில் தொடரை வென்ற இந்திய அணியில் காயம் காரணமாக அனுபவம் வாய்ந்த வீரர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்ட நிலையில், கத்துக்குட்டியாக பார்க்கப்பட்ட வீரர்கள் தொடரை வென்று சாதனை படைத்தனர். தொடர்ச்சியாக பார்டர் கவாஸ்கர் தொடரை வென்று அசத்திய இந்திய அணியில் கடைசி மூன்று போட்டிகளில் கோலி, ஷமி உட்பட பல வீரர்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடரை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்ப தயாராகி வருகிறது இந்திய அணி. இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தேச அணியில் மீண்டும் கேப்டன் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் கோலியுடன் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷாந்த் ஷர்மாவும் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த உத்தேச அணியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது இன்னிங்சை தொடங்கிய தமிழகத்தை சார்ந்த நடராஜன் கழட்டிவிடப்பட்டுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த அணியில் பிரியங் பன்சல், பரத், அபிமன்யூ ஈஸ்வரன், ஷபாஸ் நதீம் மற்றும் ராகுல் சஹர் போன்றோராம் இடம்பெற்றுள்ளனர். பயிற்சி பந்து வீசசாளர்களாக அங்கிட் ராஜ்புட், அவேஷ் கான், சந்தீப் வாரியர், கௌதம் மற்றும் சவுரப் குமார் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த நான்கு போட்டி தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையிலும், அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபறவுள்ளது. இந்திய அணி: விராத் கோலி (C), அஜிங்க்யே ரகானே, ரோகித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், சதீஸ்வர் புஜாரா, விருதிமான் சஹா, ஹர்திக் பாண்டியா, ராகுல் ( உடற்தகுதியை பொறுத்து ), ரிஷாப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், ரவி அஷ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல்.