சசிகலா ரிலீஸ் ஆகும் அதே நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. சசிகலா அபாரதத் தொகையை செலுத்தியதைத் தொடர்ந்து அவரை ஜன.27ம் தேதி விடுதலை செய்வதற்கான ஆவணங்களை சிறை நிர்வாகம் தயாரித்துள்ளது. எனவே, அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இளவரசி வரும் பிப்ரவரி 5ம் தேதி விடுதலையாகிறார். ஆனால், சுதாகரன் இன்னும் 10 கோடி அபாரதத்தை செலுத்தாததால் அவர் விடுதலை தாமதமாகும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் அதே நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட இருக்கிறது. மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவையின் வடிவமைப்பில் சுமார் ரூ.80 கோடி செலவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்துவைக்க இருக்கிறார். திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

அதேபோல் இதே விழாவில் பிரதமர் மோடியை கலந்துகொள்ள அழைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். இதே தினத்தில் தான் மாலை சசிகலா பெங்களூரு சிறையில் ரிலீஸாக இருக்கிறார். இதனால் அன்றைய தினமே தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

More News >>