காமன்வெல்த் பேட்மின்டன்: சீனியாரிட்டியை நிரூபித்த சாய்னா!
காமன்வெல்த் பேட்மின்டன் போட்டியில் சாய்னா- சிந்துவுக்கு இடையேயான தொடரில் சாய்னா நேவால் வெற்றி பெற்றார்.
21-வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பாட்மிட்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் இருவர் பதக்கத்துக்கானப் போட்டியில் பங்கேற்றனர்.
பெண்களுக்கான பேட்மிட்டன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர் சாய்னா நேவால். அதேபோல ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றவர் பி.வி.சிந்து.
இருவருக்கும் எப்போதாவது உள்ளூர் போட்டி நடக்கும் போதே பொறி பறக்கும். தற்போது இருவரும் மோதும் சர்வதேச போட்டி என்பதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், சாய்னா நேவால் 21-18, 23-21 என்ற செட் கணக்கில் சிந்துவை வெற்றி பெற்று இந்தியாவுக்கு 26-வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com