கோவையில் ஏற்பட்ட கோரச் சம்பவம்.. லாரி மோதி நான்கு பேர் பலி..
கோவையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மேல் மோதி, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகியுள்ளனர். வடக்கோவையை சேர்ந்த இந்துராஜ், கார்த்திக்ராஜ், மணி, பிரஜேஷ், மோகன் ஹரி ஆகியோர் ஆனைகட்டி சாலையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரியின் மீது மோதி கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காருக்குள் சிக்கி இருந்த 5 பேரை சுற்றி இருந்த மக்கள் நீண்ட நேரத்திற்க்கு பிறகு போராடி மீட்டனர். 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். படு காயம் அடைந்த பிரஜேஷ் என்பவர் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். போலீசார் இச்சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.