பிளட் பிரஷர் இருப்பவர்கள் வீட்டில் செய்த ஊறுகாய் சாப்பிடலாமா?
இரத்த அழுத்தத்தை சீரான கட்டுப்பாட்டில் வைப்பது என்பது வாழ்நாள் முழுவதும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை. வாழ்வியல் முறையை எப்படி மாற்றிக்கொண்டால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும் என்பதை கணித்தறியவேண்டியது முக்கியம். மது அருந்தாமல் இருப்பது, உப்பு சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது ஆகியவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான சில முக்கிய செயல்களாகும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது அன்றாடம் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயம். இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க விரும்புவோர் கவனத்தில் கொள்ளவேண்டியவை:
சாப்பிடக்கூடிய உப்பு எது?இரத்த அழுத்தம் உயராமல் பராமரிப்பதற்கு சுத்திகரிக்கப்படாத உப்பு சாப்பிடவேண்டியது அவசியம். அயோடைஸ்டு சால்ட் எனப்படும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பால் சோடியம் மட்டுமே உடலில் சேர்கிறது. பொட்டாசியம் அவற்றில் கிடைப்பதில்லை. ஆகவே, இமாலயன் பிங்க் சால்ட், பிளாக் சால்ட், ராக் சால்ட் போன்று இந்துப்பு என்று அழைக்கப்படும் உப்பினை சேர்த்துக்கொள்ளலாம்.
வீட்டு ஊறுகாயும் அப்பளமும்இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மனதில் "வீட்டில் செய்த ஊறுகாய், அப்பளமும் சாப்பிடக்கூடாதா?" என்ற கேள்வி பெரிய அளவில் உள்ளது. வீட்டில் செய்யும் ஊறுகாய் மற்றும் பப்படம் போன்றவற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருப்பதால் அவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கக்கூடியவை. வீட்டில் செய்யும் அப்பளம், புரதம் அதிகமான பயிறு வகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதாலும் மிளகு, சீரகம் போன்றவை அவற்றில் இருப்பதாலும் அதில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. ஆகவே, வீட்டில் செய்யும் ஊறுகாய், அப்பளத்தை சாப்பிடலாம் என்று உணவியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போதுமான உறக்கம்உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். மட்டுமல்ல, தினமும் படுக்கைக்குச் சென்று எழும்பும் நேரம் மாறாமல் கவனித்துக்கொள்ளவேண்டியது முக்கியமாகும்.
நடைப்பயிற்சிஇரத்த அழுத்தம் இருப்பவர்கள் முழுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். முதலாவது நடைப்பயிற்சியில் ஆரம்பிக்கலாம். ஆனால் தொடர்ந்து வேறு பயிற்சிகளையும் சேர்த்து செய்ய வேண்டும். இதயத்திற்கான பயிற்சிகள், உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகளை செய்யலாம். யோகாசமும் நல்ல பயனளிக்கும்.
அடைக்கப்பட்ட உணவுகள்பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். உணவை கெடாமல் பாதுகாப்பதற்காக சேர்க்கப்படும் பொருள்கள், உடல் ஊட்டச்சத்தினை கிரகிப்பதை தடுக்கின்றன. இப்படிப்பட்ட உணவுகள் சோடியம் மற்றும் பொட்டாசியம் இவற்றின் விகிதம், உடலில் நீரின் அளவு ஆகியவற்றை பாதிப்பதால் இரத்த அழுத்தத்தில் பெரும் சமநிலை குலைவை ஏற்படுத்துகின்றன.