புது இசைகருவிக்கு பெயர் சூட்டிய நடிகை..
பெரும்பாலும் ஹீரோயின்கள் தங்கள் செல்ல பிராணியாக வெளிநாட்டு நாய்கள் வளர்க்கின்றனர். அவைகளுக்கு தங்களுக்குப் பிடித்த பெயர் வைக்கின்றனர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அதனுடன் விளையாடி பொழுதைக் கழிக்கின்றனர். நடிகை ஸ்ருதி ஹாசன் செல்லப்பிராணியாகப் பூனை குட்டி வளர்க்கிறார். கொரோனா லாக்டவுனில் வீட்டுக்குள் தனிமையில் இருந்த ஸ்ருதி, பூனைக் குட்டியுடன் விளையாடி பொழுதைக் கழித்தார். லாக் டவுன் தளர்வில் படப்பிடிப்புகள் தொடங்கியவுடன் ஷூட்டிங்கில் பங்கேற்றார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தின் படப் பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார். பின்னர் அதன் படப் பிடிப்பு முடித்துவிட்டு தெலுங்கில் கிராக் படப் பிடிப்பில் ரவிதேஜாவுடன் கலந்துகொண்டு நடித்தார்.
ஸ்ருதிஹாசன் திறமையான நடிகை. அவரது நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் பாடல், இசையிலும் தனது கவனத்தைச் செலுத்துகிறார். சமீபத்தில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் பியானோ வாசிக்கும் வீடியோவை வெளியிட்டார். அது புதிதாக அவர் வாங்கிய பியானோ. அந்த தகவலைப் பகிர்ந்து கொண்ட அவர் "எனது இந்த புதிய பியானோவுடன் புதிய நண்பர்களை உருவாக்குகிறேன். நான் இந்த பியனோவுக்கு என்ன பெயரிட வேண்டும் ?? ஒருவேளை லைரா ??" என்று அவரே கேள்வியும் கேட்டு பதிலும் தெரிவித்தார், ஸ்ருதியின் புதிய பியானோவிற்கு ரசிகர்கள் ஈமோஜிகள் மற்றும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கில், ரவி தேஜாவுடன் ஸ்ருதி நடித்த கிராஜ் படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் மொழி அரசியல் த்ரில்லர் படமாக அவர் நடிக்கும் லாபம் படத்தை எஸ் பி ஜனநாதன் எழுதி இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஜெகபதிபாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஸ்ருதி ஹீரோயினாக நடிக்கிறார். டி இமான் இசை அமைக்கிறார்.ஸ்ருதிஹாசனின் தந்தையும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தற்போது காலில் அறுவை சிகிச்சைக்குச் செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். இதுகுறித்து ஸ்ருதிஹாசன் தனது சகோதரி அக்ஷராஹாசனுடன் இணைந்து ஒரு அறிக்கையில், அப்பா நன்றாக இருக்கிறார், நல்ல மனநிலையில் இருக்கிறார், விரைவாகக் குணமடைந்து வருகிறார். சீக்கிரம் மக்களைச் சந்திக்க உள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தார்.