சரித்திர புத்தகத்தை 2வது முறை படிக்கிறார் திரிஷா..
தலைப்பைப் பார்த்தவுடன் நடிகை த்ரிஷா வரலாற்று டிகிரி படிப்பு படிக்கிறாரா என்று தோன்றுகிறதா? ஆனால் அவர் தான் நடிக்கும் படத்துக்காகச் சரித்திரத்தைப் படிக்கத் தொடங்கி உள்ளார்.மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாகிறது. இப்படத்துக்காக விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது.
கடந்த 9 மாதமாக படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்க மணிரத்னம் திட்டமிட்டார். ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதில் குணம் அடைந்தவர் வீட்டி லேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு இருந்து வந்தார். இதற்கிடையில் படப் பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து மணிரத்தினம் ஐஸ்வர்யாராயிடம் பேசி வந்தார். ஜனவரியில் படப் பிடிப்பு தொடங்க முடிவானது.
அதன்படி ஐதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப் பிடிப்பு சத்தமில்லாமல் தொடங்கியது. இப்படத்தில் ஐஸ்வர்யராய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சரத்குமாருடன் ஐஸ்வர்யாராய் நடித்த காட்சிகள் பிரமாண்டமான அரண்மனை அரங்கில் படமானது.பொன்னியின் செல்வன் படம் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகிறது. நகரத்துப் பின்னணியிலான படங்களை யே இதுவரை மணிரத்னம் இயக்கி வந்தார். முதன் முறையாகச் சரித்திர படம் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், லால், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வரியா லட்சுமி நடிக்கின்றனர் .
இப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். கடந்த வாரத்தில் திரிஷா ஐதராபாத் சென்று இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பொன்னி யின் செல்வன் கதாபாத்திரத்துக்கு சரித்திர நாவலை ஏற்கனவே அவர் ஒருமுறை முழுமையாக படித்தார். தற்போது 2வதுமுறையாக அந்த புத்தகத்தைப் படித்து வருகிறார். குந்தவை கதாபாத்திரத்தில் தனது நடிப்பு தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்ற கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளவே இப்படி அவர் மீண்டும் மீண்டும் நாவலைப் படித்து வருகிறாராம். காரில் எங்காவது சென்றால் பயணத்தின்போதும் பொன்னியின் செல்வன் புத்தகத்தோடு தான் செல்கிறார். புத்தகமும் கையுமாக இருக்கும் படங்களை திரிஷா வெளியிட்டிருக்கிறார்.