பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு.. பின்னணி இதுதானா?!
கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரன். தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பால் தினகரன் இயேசு அழைக்கிறார் என்ற மத பிரச்சார கூட்டத்தை நடத்தி வருகிறார். மேலும், காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி, நிறுவனங்களில் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இயேசு அழைக்கிறார் குழுமம் வரி ஏய்ப்பு செய்ததா எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையில் அடையார் பகுதியில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் பாரிமுனையில் உள்ள அலுவலகம், கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி, நிறுவனங்கள் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் கணக்காளர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று, அதிகாரிகள் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். பல்கலைக்கழகம் முழுவதும் வருமான வரித்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய முதலீடுகள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பால் தினகரனின் வீடான அடையாறு ஜீவரத்தினம் நகரிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக வெளிநாட்டு முதலீடுகளில் பொய் கணக்கு காண்பிக்கப்பட்டுளளதாக எழுந்த தகவலை அடுத்து சோதனை நடந்து வருகிறது.