ஆரோக்கியம் தரும் வாழைப்பூ குழம்பு ரெசிபி..

வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவை குறிப்பாக பெண்கள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது வாழைப்பூவை பயன்படுத்தி வாழைப்பூ குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.  தேவையானப் பொருட்கள் : நறுக்கிய வாழைப்பூ - 2 கப்  துவரம்பருப்பு - 200 கிராம் சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்  கடுகு - 1 ஸ்பூன்  வெந்தயம் - 2 டீஸ்புன்  காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் - சிறிதளவு புளி - பெரிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : வாழைப்பூ குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பைப் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.  அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வாழைப்பூவைப் போட்டு வதக்கிக்கொள்ளவும்.  பின்பு அதனுடன் வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி, சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.  பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, கொதிக்க வைத்துள்ள குழம்பில் சேர்த்து இறக்கினால் சுவையான வாழைப்பூ குழம்பு ரெடி. மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>