சூர்யாவுக்கு ஜோடியாகும் ஹீரோயின் யார் தெரியுமா?
கடந்த 2019ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39வது படமாக உருவாகவிருந்தது. எதிர்பாராத விதமாகச் சிவாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. இதையடுத்து அவர் ரஜினி காந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார். இதனால் சூர்யா படம் தள்ளி வைக்கப்பட்டது.அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கிக் கடந்த 2020ம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. அதற்கேற்ப படப்பிடிப்பும் தொடங்கியது.
திடீரென்று கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பு தடைப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்புகளைத் தொடங்க அரசு அனுமதி அளித்தது. ஆனாலும் கொரோனா அபாயம் குறைய வேண்டும் என்று ரஜினி படக் குழு காத்திருந்தது.பின்னர் கடந்த டிசம்பர் 13ம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சில நாட்கள் படப் பிடிப்பு நடந்த நிலையில் ஷூட்டிங்கில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து படப் பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த்துக்கும் அடுத்த நாளில் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பைச் சட்ட சபை தேர்தல் முடிந்த பிறகு தொடங்கலாம் என ரஜினி தெரிவித்திருப்பதையடுத்து ஏப்ரலுக்கு பிறகே அதன் படப் பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்குவதாக இருந்த சூர்யாவின் படத்தை இயக்க தயாராகிறார் சிவா.மேலும் கடந்த இறுதியில் சூர்யாவின் 40வது பட அறிவிப்பு வெளியானது.இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டியராஜ் தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் படம் இயக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள ஹீரோயின் பற்றி யூகங்கள் வந்தது.
நடிகை ராஷ்மிகா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை பாண்டியராஜ் மறுத்தார், படத்துக்கு இன்னும் ஹீரோயின் இறுதி செய்ய வில்லை என்றார். யூகங்களாக வெளியான பெயர்களில் நடிகை பிரியங்கா மோகன் பெயரும் அடிபட்டது. இவர்சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தற்போது அவர்தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ஒரு கிராமப்புற அதிரடி பொழுது போக்கு அம்சமாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போது தயாரிப்புக்கு முந்தைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, பிப்ரவரியில் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சூர்யா இயக்குனர் ஞானவேல் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒரு கவுரவ தோற்றத்தில் வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கும் வாடி வாசல் படத்திலும் நடிக்க உள்ளார்.