அம்மா மினி கிளினிக் பணியாளர்கள் நியமனம் : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அம்மா மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட்டிருந்தால் பணி நியமனம் செல்லாது. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.மாவட்ட அளவிலான மருத்துவக் குழு மூலமே பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவு.மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக்களுக்காக 585 மருத்துவ உதவியாளர்களும், 1415 செவிலியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான பணியாளர்கள் தேர்வு தனியார் ஏஜென்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இப்படி ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் முன்பதிவு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. கொரோனா தொற்று காலங்களில் அனுபவமில்லாத செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படலாம்.எனவே ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஸ் மற்றும் ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் மத்திய சுகாதாரத்துறை இயக்குனரகத்தின் பரிந்துரையின் பேரில் மாவட்ட அளவிலான குழு அமைத்துத் தான் நியமனம் செய்யப்படுகிறார்கள் இது முற்றிலும் தற்காலிக பணி தான் என அறிக்கையைத் தாக்கல் செய்தார்.அவசர நிலை கருதி அரசு இந்த நிலை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பணியாளர்கள் நியமனம் மாவட்ட சுகாதாரக்குழு மூலமாகவே நடைபெற வேண்டும் ஒருவேளை தனியார் நிறுவனங்கள் மூலமாகப் பணி நியமனங்கள் செய்யப்பட்டிருந்தால் அவை செல்லாது என்றும் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் ஓராண்டுக்கு மேல் பணிபுரிய வேண்டி இருந்தால் தேர்வாணையம் மூலமாக நியமனம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை நிறைவு செய்தனர்.

More News >>