கொரோனாவால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை.. சிறுவனை நெகிழவைத்த நடிகர் அஜித்!
பள்ளி செல்ல முடியாமல் தவித்த சிறுவனின் முழு கல்வி செலவை ஏற்றுக்கொண்ட நடிகர் அஜித்தை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். நடிகர் அஜித் என்றாலே பைக்கில் பயணத்தில் தீவிரமாக ஈடுபடுவார். இருப்பினும், நீண்ட நாட்களாக நீண்ட தூரம் பயணத்தைத் தவிர்த்து நடிகர் அஜித் வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் அஜித் சிக்கிம் மாநிலத்திற்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடை ஒன்றில் உணவு சாப்பிட்டுள்ளார்.
அப்போது, இந்த உணவுக்கடையில் பள்ளிச் சீருடை அணிந்து சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறான். இதனையடுத்து, சிறுவனை நடிகர் அஜித், விசாரித்தபோது, உணவுக்கடை உரிமையாளரின் மகன்தான் சிறுவன் என்றும், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக உணவகம் செயல்படவில்லை. இதனால், சிறுவனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து, உடனே சிறுவன் கல்வி கற்க முழு கல்வி செலவை நான் ஏற்கிறேன் என்று சிறுவனின் தந்தையிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும், தனது பயணத்தில் உடன் வந்த நண்பனிடம் சிறுவனின் கல்வி செலவு குறித்து கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, கடையின் உரிமையாளர் நடிகர் அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்தின் அந்த செயலுக்கு பல்வேறு தரப்பின் பாராட்டி வருகின்றனர். சிறுவனுடன் நடிகர் அஜித் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.