மத்தியப்பிரதேச கொடூரம்.. 19 வயது மாணவியை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசிய கும்பல்!
மத்தியப்பிரதேசத்தில் 19 வயது மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்துவரும் 19 வயதான கல்லூரி மாணவியின் முன்னாள் காதலன் மாணவியை நந்திகிராமில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முன்னாள் காதலன்தான் என்று நம்பி வீட்டிற்கு சென்ற மாணவியை முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்ததுபோதாது என்று தாங்கள் தப்பிக்க மாணவியை கத்தியால் குத்திய கொடூர கும்பல் ஒரு சாக்கில் மாணவியை கட்டிப்போட்டு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளனர்.
மாணவி தண்டவாளத்தில் கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பலத்த காயமடைந்துடன் மாணவியை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக நாக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது குறிப்பிடத்தக்கது.